தூத்துக்குடியில் பிப்.19 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு

தூத்துக்குடியில் பிப்.19 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான “விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 19.02.2026 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது விவசாயம் தொடர்பான கோரிக்கைகள், பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக அதிகாரிகளிடம் முன்வைத்து தீர்வு பெறுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயத்துறையுடன் தொடர்புடைய அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளதால், விவசாயிகள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.