தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சாலைகளின் ஓரங்களில் உள்ள விளம்பர பேனர்கள் அகற்ற: ஆட்சியர் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சாலைகளின் ஓரங்களில் உள்ள விளம்பர பேனர்கள் அகற்ற: ஆட்சியர் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சாலை ஓரங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள், சிறிய விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகத் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி நெடுஞ்சாலை கோட்டத்திற்குட்பட்ட உட்கோட்டங்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் நடைமேடைகள், நடைபாதைகள், அனைத்து வகையான சாலைகளின் ஓரங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் சிறிய விளம்பர டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரபலகைகள் கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகத் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து நெடுஞ்சாலை கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து வகையான விளம்பர பலகைகள் அகற்றப்பட்டதற்கான விரிவான அறிக்கை மற்றும் அகற்றப்பட்ட விளம்பர பலகைகள் குறித்த விவரங்களை உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து உதவிக்கோட்டப்பொறியாளர்களுக்கு கோட்டப்பொறியாளர் ஆறுமுகநயினார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.