மத்திய அமைச்சர் படத்தை செருப்பால் அடித்து திமுகவினர் திடீர் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு

மத்திய அமைச்சர் படத்தை செருப்பால் அடித்து திமுகவினர் திடீர் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் மத்திய அமைச்சர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உருவ படத்தை செருப்பால் அடித்து திமுகவினர் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குறித்து அநாகரீகமாக பேசியதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும், முன்மொழிக் கொள்கையை எதிர்த்தும் தொகுதி மறுசீரமைப்பை ரத்து செய்ய கோரியும் தூத்துக்குடியில் மாநகர திமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு மாநகர செயலாளர் எஸ்.ஆர் ஆனந்தசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ப்ளோரன்ஸ், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட மருத்துவமனை தலைவர் அருண்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா தேவி, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவிக்குமார், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வர சிங், வட்டச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், செல்வராஜ் உள்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் உருவ படங்களை செருப்பால் அடித்து கிழித்து எரிந்தனர். போராட்டத்தால் பேருந்து நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.