எரல் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து பூமிக்கு உதவும் "மறுசுழற்சி பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்..!

எரல் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து பூமிக்கு உதவும் "மறுசுழற்சி பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்..!

*தூத்துக்குடி மாவட்டம் எரல் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து பூமிக்கு உதவும் "மறுசுழற்சி பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை , சுகாதார பொருட்கள் அடங்கிய ஹெல்த் அன்ட் ஹைஜனிக் கிட் வழங்கப்பட்டது*

  தூத்துக்குடி மாவட்டம், எரல் பகுதியில் *ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா* நிறுவனத் தலைவர் *டாக்டர்.கல்பனா சங்கர்* அவர்களின் ஆலோசனை படி மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் *திரு : கிருஷ்ணன்* அவர்களின் வழிகாட்டுதலின்படியும், தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலர் திருமதி: ஜெயா* அவர்கள் ஒருங்கிணைப்பில், தூத்துக்குடி மாவட்டம் எரல் பகுதியில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து தரம் பிரித்து பூமியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மறுசுழற்சி பாதுகாவலர்களை கண்டெடுத்து புதுமையான வழிமுறைகளுடன் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது இத்திட்டமானது மூன்று படிநிலைகளுடன் (ENGAGE, EDUCATE, and EMPOWER) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த முகாமில் குப்பை சேகரிப்பவர்களுக்கான எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட 11 தலைப்புகளில் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சியில் ஏராளமான குப்பை சேகரிக்கும் மறுசுழற்சி பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர்  

   இன்று மறுசுழற்சி பாதுகாவலர்களுக்கு தனி மனித சுத்தம் , சுகாதாரம், சுகாதரமின்மையால் ஏற்பட கூடிய நோய்கள் , நீரின் மாசுபாடு , தனி மனித கடமைகள் , சமூக இடைவெளி போன்றவை குறித்து விழிப்புணர்வு , மற்றும் பயிற்சி கொடுக்கப்பட்டது சிறப்பு விருந்தினர்களாக எரல் பேரூராட்சி நிர்வாக அதிகாரி திரு.சுப்ரமணியன் அவர்களும் எரல் பேரூராட்சி தலைவரான திருமதி.ஷர்மிளாதேவி மணிவண்ணன் அவர்களும் மறுசுழற்சி பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சுகாதார பொருட்கள் அடங்கிய ஹெல்த் அன்ட் ஹைஜனிக் கிட் வழங்கினார்கள் மேலும் மறுசுழற்சி பாதுகாவலர்களிடம் அடையாள அட்டையின் பயன்பாடு மற்றும் முக்கியத்தும் பற்றி எடுத்துரைத்தனர் 

 இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹேன்ட் இன் ஹேண்ட் இந்தியா வின் தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலர் திருமதி ஜெயா அவர்கள் செய்திருந்தார்.