கருப்பட்டி என கற்களை கொடுத்த நூதன மோசடி : டிப்டாப் ஆசாமி கைவரிசை!
கருப்பட்டி என கற்களை கொடுத்த நூதன மோசடி : டிப்டாப் ஆசாமி கைவரிசை!
உடன்குடியில் வயதான தம்பதியை டிப்டாப் ஆசாமி ஒருவர் நூதன முறையில் ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் நேற்று முன்தினம் வாரச்சந்தை நடந்தது. இதில் பல ஊர்களில் இருந்து தர்மம் எடுக்க வருவார்கள். அப்படி வந்த வயதான இரு தம்பதியர்கள் காலையில் வந்து உடன்குடி பஜார் வீதிகள் மற்றும் வாரச்சந்தையில் கடை கடையாக தர்மம் எடுத்து சேர்ந்த பணத்தையும், சில்லறை காசு களையும் செட்டியாபத்து ரோட்டில் உள்ள ஒரு பஸ் நிறுத்த நிழற்குடையில் வைத்து மாலையில் எண்ணிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த டிப்டாப் ஆசாமி, சில்லரை காசு வேணும் எவ்வளவு இருக்கிறது என்று கேட்டார்? தம்பதியினர் ரூ.1055 இருப்பதாக சொன்னார்கள். என்னிடம் இருக்கும் கருப்பட்டி கொட்டானை வைத்துக் கொள்ளுங்கள் நான் போய் சில்லறையை கொடுத்து விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு வருகிறேன். அதுவரை இந்த கருப்பட்டி கொட்டான் உங்களிடம் இருக்கட்டும் இதன் விலை ரூ.3000 என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
மாலை 5 மணிக்கு சென்ற ஆசாமி இரவு 7 மணி வரை காத்திருந்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தம்பதியினர் கருப்பட்டி கொட்டானை பிரித்து பார்த்தபோது, அதில் கற்கள் மற்றும் குப்பைகள் இருந்தது. அதற்கு பின் தான் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது தெரிந்து யாரிடம் போய் சொல்வது, யாரிடம் கேட்பது என வயதான தம்பதி புலம்பிக்கொண்டே இருந்தனர். நூதனமாக நடந்த மோசடி அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.