ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தினம்: 22ம் தேதி மதுக்கடை, பார்களை மூட ஆட்சியர் உத்தரவு!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தினத்தை முன்னிட்டு வருகிற 22ம் தேதி 53 மதுக்கடை/ பார்களை மூட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் சம்பவம் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 22.05.2023 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள, 2003 விதி 12 துணை விதி (1) இன்படி 53 மதுபான கடைகளும் / பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.

மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூடப்படும் கடைகளின் விபரம்