சமுதாய நலக்கூடம் அமைக்க வலியுறுத்தி சிபிஎம் மறியல்: 50க்கும் மேற்பட்டோர் கைது!
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலி வெட்டி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலி வெட்டி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலி வெட்டி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை கொடுக்கப்பட்டது. பின்னர் சமுதாய நலக்கூடம் அமைக்க தாட்கோ மூலம் ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது சமுதாய நலக்கூடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் அருகே உள்ள பள்ளிக்கூட சமையலறை கட்ட ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) ராமராஜ், மற்றும் இளநிலை பொறியாளர் திருமதி பிரான்சிஸ்கா சங்கரேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
இதை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் சமுதாய நல கூடம் கட்ட வலியுறுத்தியும் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சாலை முப்பிலிவெட்டி பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், சிபிஎம் ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் சித்ராதேவி, கிளைச் செயலாளர் சுப்ரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, ராஜகனி, கலைச்செல்வி, ஊர் பொதுமக்கள் சார்பில் கணேசன் ஆசிரியர், சீனா குமாரி, சுப்பையா ஆறுமுகநயினார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துணை காவல் கண்காணிப்பாளர் சம்பத் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.