தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி! கணக்கில் காட்டப்படாத ரூ.22,970 பறிமுதல்... அதிகாரிகளிடம் தீவிர விசாரணை!

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி! கணக்கில் காட்டப்படாத ரூ.22,970 பறிமுதல்... அதிகாரிகளிடம் தீவிர விசாரணை!

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட திடீர் அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.22,970 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தின் சிவில் சப்ளை (வட்ட வழங்கல்) பிரிவில், லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் பீட்டர் பால்துரை தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, உரிய ஆவணங்களோ அல்லது கணக்குப் பதிவுகளோ இன்றி வைத்திருந்ததாகக் கூறப்படும் ரூ.22,970 பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பணம் தொடர்பாக சிவில் சப்ளை பிரிவு ஊழியரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த திடீர் சோதனை மற்றும் பணப் பறிமுதல் சம்பவம், தூத்துக்குடி அரசு அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.