திருநங்கைகள் நலவாரிய அட்டை பெற 21ம் தேதி சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!

திருநங்கைகள் நலவாரிய அட்டை பெற 21ம் தேதி சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் நலவாரிய அடையாள அட்டை பெற ஏதுவாக வருகின்ற 21ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநங்கைகளுக்கும் முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தையும் அளித்து அவர்களையும் சமூகத்தில் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இதன்படி, தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த திருநங்கைகளின் ஏழாவது வாரியக் கூட்டத்தில் திருநங்கைகள் நல வாரியத்தில் பதிவு செய்து நலவாரிய அடையாள அட்டை பெற்றுள்ளனர்.

மேலும், திருநங்கைகள் நலவாரியத்தில் இதுவரை பதிவு செய்யாத நபர்கள் பதிவு செய்து நலவாரிய அடையாள அட்டை பெற ஏதுவாக திருநங்கைகள் நல வாரிய அலுவலர் சாரா உறுப்பினர்கள் மற்றும் திருநங்கைகளுக்காக செயல்படும் அதன் தொண்டு நிறுவனங்களைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்த 21.06.2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை, பெறுவதற்கு பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை பெற்றிட வழிவகை செய்யப்படவுள்ளது.

மேலும், திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் இம் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 21.06.2024 அன்று நடைபெறும் முகாமில் அனைத்து திருநங்கைகளும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்

ளார்.