அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் விபத்துக்கள் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.!!

அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் விபத்துக்கள் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.!!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் கல்லூரி செல்லும் பிரதான சாலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் விபத்துக்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் எம் எஸ் முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அம்பேத்கர் சிலை முதல் காமராஜ் கல்லூரி வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டது. இச்சாலையானது தூத்துக்குடி நகரத்திற்குள் இருந்து முத்தையாபுரம் முள்ளக்காடு உள்ளிட்ட திருச்செந்தூர் பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய பிரதான சாலையாகும். 

மேலும் காமராஜ் கல்லூரி பயிலக்கூடிய மாணவ மாணவியர்கள் தினசரி பயன்படுத்தக்கூடிய முக்கியமான பிரதான சாலையாகவும் திகழ்கிறது. 

இச்சாலையில் பாதாள சாக்கடைக்காக மூடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் உள்ள மூடிகள் அடிக்கடி சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை போடப்பட்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட முறை மூடிகள் மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு திடீரென்று ஏற்படும் குழிகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். நேற்றைய தினம் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் மூடி உடைந்ததை கவனிக்காமல் சென்று அதில் விழுந்து விபத்துக்குள்ளானார். 

மேலும் மாநகராட்சி சார்பில் போடப்படும் மூடிகள் சுமார் இரண்டு மாதங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை மட்டுமே சேதமடையாமல் உள்ளது. பின்னர் மீண்டும் அது சேதமடைந்து விடுகிறது.. 

இவ்வாறு ஏற்பட காரணம் தரமற்ற முறையில் போடப்பட்ட மூடிகள் தான் காரணம் என கூறப்படுகிறது எனவே மூடிகளின் தரத்தினை ஆய்வு செய்தும், நிரந்தரமாக இதற்கு தீர்வு காணும் வகையில் தரமான மூடியை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும், தரமற்ற முறையில் பணியினை மேற்கொண்ட சாலையின் ஒப்பதகாரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். என கூறியுள்ளார்