தூத்துக்குடி தெப்பகுளத்தில் திடீரென ஏற்பட்ட விரிசலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பார்வையிட்டார்.

தூத்துக்குடி தெப்பகுளத்தில் திடீரென ஏற்பட்ட விரிசலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பார்வையிட்டார்.

தூத்துக்குடி நகரின் மைப்பகுதியில் சிவன் கோவில் அருகே அமைந்துள்ள தெப்பகுளத்தில் மாநகராட்சி சார்பில் சுற்றுபுற நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்த நிலையில் முழுமையாக நிரம்பி இருந்த தெப்பகுளத்தில் இருந்து நீரை வெளியேற்றியதின் விளைவாக தெப்பக்குளத்தின் சுற்று சுவர் 6 அடி வரை உள்வாங்கி மாநகாராட்சி அமைத்த நடைபாதைக்கும் தெப்பக்குளத்திற்கும் நடுவில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. 

இதனை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பார்வையிட்டு கூறுகையில்: தூத்துக்குடி நகருக்கென்று ஒரு தெப்பகுளம் தான் தற்போது உள்ளது. பழமை வாய்ந்த இந்த தெப்பகுளத்தில் மாநகராட்சி சார்பில் நடைமேடை அமைப்பதாக கூறி எந்த வித திட்டமிடலும் இல்லாமலும் அந்த இடத்தை பற்றி உரிய அதிகாரிகளின் ஆய்வறிக்கையும் இல்லாமல் 75 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை அமைக்கும் பணி நடந்துள்ளது. இந்நிலையில் தெப்பக்குளத்தில் நிரம்பி இருந்த தண்ணீரை வெளியேற்றியதின் விளைவாக மண்ணறிப்பு ஏற்பட்டு தெப்பகுளம் சுற்று சுவர் முற்றிலும் உள்வாங்கி தற்போது பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.  வரும் தை மாதம் தெப்பதிருவிழா நடைபெறவுள்ள நிலையில் இந்நிகழ்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  எனவே, மாநகராட்சி நிர்வாகம் இந்த தெப்பகுளத்தில் உடனடியாக பணியை துவங்கி பழமை மாறாமல் மேலும், இது போன்ற பிரச்சனைகள் வராத வண்ணம் தகுந்த பாதுகாப்பு அம்சங்களோடு தெப்பத்திருவிழாவிற்கு முன் குளத்தை சீரமைத்து தர வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி செயலாளருர் சுதாகர், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், சிறுபாண்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, சந்தனபட்டு, ஒன்றிய செயலாளர் காசிராஜன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் சத்யா லட்சுமணன் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரு மணி, வழக்கறிஞர்கள் முனியசாமி, சரவணபெருமாள், ராஜ்குமார், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் இந்திரா, மெஜூலா, சாந்தி,  இராஜேஷ்வரி, தமிழரசி, அன்னபாக்கியம், ஷாலினி, ஸ்மைலா, முத்து லெட்சுமி, சரோஜா, நிர்வாகிகள் பரிபூரணராஜா, சொக்கலிங்கம், இம்ரான், ஸ்ரீராம், ராஜசேகர், வட்ட செயலாளர்கள் சங்கர், கொம்பையா, ஜெயகுமார், சேவியர்ராஜ், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.