தமிழகம் முழுவதும் ஜூன் 21 ஆம் தேதி தர்னா போரட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் தூத்துக்குடியில் பேட்டி!!

சத்துணவு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளிஅ வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைஙரங்களிலும் வ்ருகின்ற ஜூன் 21 ஆம் தேதி மாலை நேர தர்னா போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மலர்விழி தூத்துக்குடியில் பேட்டியளித்தார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 40 வது ஆண்டு மாணிக்க விழா வை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமையன்று அரசு ஊழியர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாக்கியம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்த செல்வம், பெருமாள், அண்ணம்மாள், மாவட்ட தனிக்கையாளர்கள் மோகனா, பாஸ்கர், விஜயராணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட செயலாளர் செல்லத்துரை வரவேற்று பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மலர்விழி, மாநில துணைத் தலைவர் தமிழரசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கிரிஸ்டோபர், மாவட்ட செயலாளர் தேசி.முருகன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக சங்க மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில பொதுச்செயலாளர் மலர்விழி கூறியதாவது
தமிழ்நாடு அரசு 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலம் முறை ஊதியம், ஊதிய உயர்வு, பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறப்பட்டது ஆனால் மூன்று ஆண்டுகள் முடிந்தும் கூட சட்டப்படி கிடைக்க வேண்டிய முறையான காலமுறை ஊதியம் இதுவரை கிடைக்கப் படவில்லை.
குறைந்த பட்சம் ஓய்வூதியம் 9000, பணிக்கொடையாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையத்தில் உள்ள 63 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளது போர்க்கால் அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், 10 20 30 வருடங்கள் பணிபுரிந்து ஊழியர்களுக்கு தேக்கநிலை ஊதியம் பனிமூப்பு அடிப்படையில் நிலுவையுடன் வழங்க வேண்டும், பிற துறைகளில் வேலை பார்க்கும் மகளிர்க்கு 12 மாத காலம் பிரசவ விடுப்பு ஊதியத்துடன் வழங்குவது போன்று சத்துண ஊழியர்களுக்கும் 12 மாதம் பிரசவகால விடுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும், அதேபோன்று சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து பணப் பயன்களையும் உடனே வழங்க வேண்டும், காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளூக்கும் விரிவு படுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்,
காலி பணியிடங்களில் பணி மூப்பு மற்றும் கல்வி தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்,ஆண் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் பயன்படுத்த முடியாத உணவுப் பொருட்களுக்கு உரிய தண்ட தொகையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் போன்ற உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலை நேர தர்னா போராட்டம் நடத்த உள்ளோம். அதனை தொடர்ந்து ஜூன் 24 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் சென்று மாண்புமிகு அரசு அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்து வாழ்வாதார கோரிக்கை குறித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளோம் என கூறினார்.