சைக்கிள் ஓட்டத் தெரியுமா? ரூ.50,000 வரை சம்பளம்... தூத்துக்குடி ஊரக வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை...
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 3 பிரிவுகளில் வெவ்வேறு காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 3 பிரிவுகளில் வெவ்வேறு காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மொத்தம் 30 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர், அலுவலக உதவியாளர் என 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி அலுவலக உதவியாளர் பணிக்கு 23 பேர், டிரைவர் பணிக்கு 3 பேர், இரவு காவலாளி பணிக்கு 4 பேர் என 30 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ம்வகுப்பு முடித்திருக்க வேண்டும் அலுவலக உதவியாளர் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 8 ம் வகுப்பு முடித்து லைசென்ஸ் வைத்திருப்பதோடு, காவலாளி பணிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எஸ்சி, எஸ்டி என்ற 37 வயதுக்குள்ளும், எம்பிசி, டிஎன்சி, பிசி என்றால் 34 வயதுக்குள்ளும் ஜிடி என்றால் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகள்படி மற்றவர்களுக்கும் வயது தளர்வு உண்டு.
அலுவலக உதவியாளர் மற்றும் காவலாளி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரையும், டிரைவருக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையும் வழங்கப்படும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வாகும் நபர்கள் தூத்துக்குடி, ஆழ்வார்குறிச்சி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
எந்த ஊராட்சி ஒன்றியங்களில் பணி வேண்டுமோ அந்த ஊராட்சி ஒன்றியம் சென்று விண்ணப்ப படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு https://thoothukudi.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய தள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஏப்ரல் 4ம் தேதிக்குள் தபால் முறையில் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.