தூத்துக்குடியில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை : ரூ.1,40.000 பணம் பறிமுதல்!
தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு அரசு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை 1.40 லட்சம் ரூபாய் பறிமுதல்!.

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு அரசு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை 1.40 லட்சம் ரூபாய் பறிமுதல்!.
தூத்துக்குடி, மில்லர் புரம் 2வது தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் உள்ளது. இங்கு திடீரென லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பால், அலுவல் குழு அலுவலர் பேச்சி முத்து ஆகியோர் தலைமையில், 8 பேர் கொண்ட குழு சோதனை நடத்தினர்.
சோதனையில், மேற்பார்வையாளர் தியாகராஜன் என்பவரிடமிருந்து காரில் மஞ்சள் பையில் வைத்திருந்த 1.40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.