தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடத்திற்கு அழைப்பு: மாதம் ரூ.10,000 சம்பளம்...!
தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் - பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக...
தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் - பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலமாக நிரப்பிட தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நிபந்தனைகள் சட்டம் 2016, பிரிவு 19-ன்படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதித்து ஆணையிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம், திருமங்கலக்குறிச்சி அரசு ஆதிந உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) ஒன்றும், திருச்செந்தூர் வட்டம், மாணாடுதண்டுபத்து அரசு ஆதிந நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் ஒன்றும் காலியாக உள்ளது. மேற்படி காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதிபெற்ற நபர்களைக் கொண்டு நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியருக்கு ரூ.7,500/, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10,000/- மாதத் தொகுப்பூதியத்தில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நிரப்பிட உள்ளது. தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகின்ற 13.01.2023-க்குள் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.