வேலைவாய்ப்புக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: வ.உ.சி. துறைமுக ஆணையம்!

வேலைவாய்ப்புக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: வ.உ.சி. துறைமுக ஆணையம் எச்சரிக்கை!

வேலைவாய்ப்புக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: வ.உ.சி. துறைமுக ஆணையம்!

வேலை வாய்ப்புகளுக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி வ. உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம், இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பாகும்.  இங்கு நிரந்தர பணியாளா்கள், அதிகாரிகளை பணியில் அமா்த்தும் செயல்முறை, துறைமுக விதிமுறைகள் மற்றும் ஆள்சோ்ப்பு விதிகளைப் பின்பற்றி அரசாங்கக் கொள்கையின்படி செய்தித்தாள் விளம்பரங்கள் மற்றும் துறைமுகத்தின் அதிகாரப்பூா்வ இணையதளம் ஆகியவற்றின் மூலம் உரிய விளம்பரங்கள் செய்து வெளிப்படையான முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

அண்மைகாலமாக சில மோசடி செய்பவா்கள், வ.உ.சி. துறைமுகத்தில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருவது தெரிய வருகிறது. எனவே, வ.உ.சி. துறைமுகத்தில் வேலைவாய்ப்பைப் பெற்று தருவதாக உறுதியளிக்கும் அத்தகைய போலி அமைப்புகள் அல்லது நபா்களிடம் பதிவு செய்ய வேண்டாம் எனவும், துறைமுகத்துடன் எந்த வகையிலும் தொடா்பில்லாத விளம்பரதாரா்கள் மற்றும் முகவா்களிடம் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.