பிஎஸ்ஏ சிகால் நிறுவனத்தின் கொடூர சுரண்டல் : ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகை!
தொழிலாளர்கள் மீது கொடூர சுரண்டலில் ஈடுபடும் பிஎஸ்ஏ சிகால் நிறுவனம் மீது ஆட்சியரிடம் சிஐடியு புகார் மனு
தொழிலாளர்கள் மீது கொடூர சுரண்டலில் ஈடுபடும் பிஎஸ்ஏ சிகால் நிறுவனம் மீது ஆட்சியரிடம் சிஐடியு புகார் மனு
தூத்துக்குடி துறைமுக ஆணையத்தின் 7-வது கப்பல் தளம் போர்ட் ஆப் சிங்கபூர் ஆதாரிட்டி என்ற பன்னாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான பிஎஸ்ஏ சிகால் நிறுவனத்தால் 30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் கண்டெயினர் தளமாக இயக்கப்பட்டு வருகிறது. புதிய தொழில்நுட்பங்களை துறைமுக சரக்கு கையாளுதலில் பயன்படுத்துவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்ற அடிப்படையில் கட்டி இயக்கி ஒப்படைத்தல் (டீரடைன ழுpநசயவந யனெ வுசயளெகநச) முறையில் 1998 ஆம் ஆண்டு துறைமுக நிர்வாகத்துக்கும்; பிஎஸ்ஏ சீகால் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒபபந்தத்தின் அடிப்படையில் 1999 டிசம்பர் மாதத்தில் இருந்து இயங்கி வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளாக லாபத்துடன் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பல சலுகைகளை படிப்படியாக நிறுத்தியது.ஆனால், தொழிலாளர்கள் எதுவும் எதிர்பார்க்காமல் இந்த நிறுவனத்திற்காக தங்களுடைய உழைப்பை மேலும் அதிகப்படுத்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே 1.01.2023 முதல் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கி தற்போது பெற்று வரும் ஊதியதத்தில் 40 சதத்துக்கு குறையாத வகையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கப்பல் பணி இல்லாத நாட்களில் லேசிங் தொழிலாளர்கள் மற்றும் பிரைமூவர் ஓட்டுனர்களுக்கு அவர்களது வேலைத்தளமான பிஎஸ்ஏ சீகால் கண்டெயினர் தளத்தில் மாற்று வேலை வழங்க வேண்டும், பிஎஸ்ஏ சீகால் மற்றும் அவர்ளால் நியமிக்கப்பட்ட ஒப்பந்தகாரர்கள் கொடுத்த நிர்பந்தம் காரணமாக பல்வேறு கால கட்டங்களில் வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சட்ட சலுகைகளான வேலைநீக்க இழப்பீடு, பணிக்கொடை, விடுப்பு சம்பளம் மற்றும் நோட்டீஸ் ஊதியம் ஆகியவை சம்மந்தப்பட்ட ஒப்பந்தகாரர் வழங்காத பட்சத்தில் முதன்மை வேலையளிப்பவரான பிஎஸ்ஏ சீகால் நிறுவனம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உரிய கவனம் செலுத்தி உடனடியாக ஒப்பந்தகாரரும், பிஎஸ்ஏ சீகால் நிறுவனமும் நிறைவேற்ற வேண்டும்,
போராட்ட அறிவிப்பு
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 24.04.2023 முதல் கறுப்பு பேட்ஸ் அணிந்து பணியாற்றுதல், 29.04.2023 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், 7.05.2023 அன்று தொழிலாளர்கள் தங்கள் குடுமப் உறுப்பினர்களோடு பங்கேற்கும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்; பன்னாட்டு கம்பெனியான பிஎஸ்ஏ சீகால் நிறுவனம் தொழிலாளர்கள் மீது நடத்தி வரும்கொடூர சுரண்டலை தூத்துக்குடி மக்களிடம் அம்பலப்படுத்தும் 1 லட்சம் துண்டு பிரசுர விநியோக இயக்கம்; ஜுன் மாதத்தில் தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட் இயக்கங்கள் நடைபெறும் எனவும், எனவே இப்பிரச்சினையின் தவீரம் கருதி மாவட்ட ஆட்சியர் நேரடி தலையீடு செய்து சம்மந்தப்பட்ட தரப்பினரை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் சிஐடியு மாநில செயலாளர் ஆர்.ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, சாலை போக்குவரத்து சம்மேளனம் மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பி எஸ் ஏ சிகால் நிறுவனத்தில் பனிபுரியும் தொழிலாளர்கள் பலர் கல்ந்து கொண்டனர்.