போதையற்ற தமிழ்நாடு 1 கோடி கையெழுத்து இயக்கம்: முத்தையாபுரத்தில் தொடக்கம்!
போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து முத்தையாபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து முத்தையாபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட, முத்தையாபுரம் பல்க் பஜாரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்கிட 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் ஜான்சன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கண்ணன், உதயக்குமார், கார்த்திமுத்து, நேசமனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்யராஜ், முள்ளக்காடு ஆர்ம்ப சுகாதர நிலைய மருத்துவர் சூர்யபிரகாஷ் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை சார்பில் பெரியசாமி, தூத்துக்குடி மாநகரட்சி, தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி, முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் செந்தில் குமார், முள்ளக்காடு வி.ஏ.ஓ ராஜேஷ் கண்ணா, சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், சிபிஎம் புறநகர் செயலாளர் ராஜா, ஸ்பிக் யூணியன் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.