ஆத்தூர் அருகே நில பிரச்சனை காரணமாக கணவன் - மனைவிக்கு அரிவாள் வெட்டு!

ஆத்தூர் அருகே நில பிரச்சனை காரணமாக கணவன் - மனைவிக்கு அரிவாள் வெட்டு!

கீரனூரில் நில பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு அரிவாள் வெட்டு. படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரனூரைச் சேர்ந்த நாராயணகுமார்(44). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரின் சித்திக்கும் நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி நாராயணகுமாரை சங்கரலிங்கம் தரப்பினர் தாக்கி அவரிடம் இருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றதாக நாராயணகுமார் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் போலீசார் இந்த புகாரை முறையாக விசாரிக்காமல் தாமதித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சங்கரலிங்கம் உட்பட 3 பேர் இன்று வீடு புகுந்து நாராயணகுமாரை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனை தடுத்த நாராயணகுமார் மனைவி ஷோபனாவுக்கும் கையில் வெட்டுபட்டுள்ளது. இதில் காயமடைந்த கணவன் மனைவி இரண்டு பேரை அக்கம் பக்கத்திலிருந்து மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.