பைக் மீது லாரி மோதி பொறியியல் கல்லூரி மாணவர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி கோக்கூரைச் சேர்ந்தவர் மணி. இவர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் முகேஷ் (24). இவர் வாகைகுளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று காலையில் முகேஷ் மோட்டார் சைக்கிளில், தனது தந்தை மணியை ஏற்றிக் கொண்டு சிப்காட் பகுதியில் உள்ள தனியார் குடோனுக்கு சென்று உள்ளார்.
அங்கு தந்தை மணியை இறக்கி விட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பி சென்று கொண்டு இருந்தார். அவர் சிப்காட் நுழைவாயில் பகுதியில் உள்ள மதுரை பைபாஸ் ரோட்டில் சென்ற போது, அந்த வழியாக வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறிந்த சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE