தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி பாலாஜி சரவணன்!

தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு அனைத்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான சண்டைகள் சின்ன, சின்ன பிரச்சனைகளுக்காக வாக்குவதாதம் ஏற்பட்டு பெரிய மோதலாக மாறுகிறது.  இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்பவரை, மற்றொருவர் ஏன் இப்படி வேகமாக போகிறாய் என்றும், நடு ரோட்டில் நிற்பவர்களை ஏன் இப்படி நிற்கிறாய் என்றும், ஒருவரை, ஒருவரையொருவர் பார்ப்பதை நீ ஏன் என்னை முறைத்துப் பார்த்தாய் என்ற ஒருவருக்கொருவர் நேரடியாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வாக்குவாதம் முற்றி இருவருக்கும் வேண்டியவர்கள் இருதரப்பினராக சேர்ந்து பெரிய சண்டையில் போய் விட்டுவிடுகிறது. 

ஆகவே எந்த பிரச்சனையாக இருந்தாலும் பாதிக்கப்படும் பொதுமக்கள் நேரடியாக தங்களுக்குள் பிரச்சனையில் ஈடுபடக்கூடாது. உதாரணத்திற்கு இருசக்கர வாகனத்தில் வேகமாக அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல், நடுரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் பொதுமக்கள் நேரடியாக தங்களுக்குள் ஏன் இப்படி செய்கிறாய் என்றோ, ஏன் முறைத்துப் பார்க்கிறாய் என்று கேட்டோ வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபடுவோரை வாய்மொழிப்புகாராகவோ,  புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தோ காவல்துறைக்கு புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்க விருப்புபவர்கள் மாவட்ட காவல்துறை ‘ஹலோ போலீஸ் என் 95144 44100 என்ற எண்ணிற்கோ அல்லது அவசர போலீஸ் எண். 100க்கோ புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளித்தால் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். தகவல் தருபவர்கள் பெயர் மற்றும் விபரம் இரகசியமாக வைக்கப்படும்.