அண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வீடியோ வெளியீடு!

தேவையில்லாத ஆப்புகளை செல்போனில் டவுன்லோட் செய்ய வேண்டாம் : ஏடிஎஸ்பி கார்த்திகேயன் காணொளி வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீடியோவை கான....

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சைபர் குற்ற விழிப்புணர்வு காணொளி வெளியிட்டுள்ளார்.

அதில் நாம் நம்மிடம் உள்ள செல்போனை பாதுகாப்பான முறையில் தான் பயன்படுத்துகிறோம் என நம்புகிறீர்களா என்றால் இல்லை, நமது செல்போனில் பலவிதமான ஆப்புகளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்கிறோம் அவ்வாறு செய்வதால் ஆப்பில் கேட்கக்கூடிய அனைத்திற்கும் அனுமதி அளிக்கிறோம். உதாரணமாக நம்முடைய கேமரா, கேலரி, காண்டாக்ட் எல்லாவற்றிற்கும் அனுமதி அளிக்கிறோம். இந்த மாதிரி கொடுப்பதால் பல பேர் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இதை நாம் சிந்திப்பதே கிடையாது.

உங்களது செல்போன் கேமராவை உங்களுக்கும் தெரியாமல் இயக்க முடியும் அதன் மூலம் கண்காணித்து உங்களை மிரட்டவும் செய்ய முடியும் ஆதலால் தேவையில்லாத ஆப்புகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் எல்லாவற்றிற்கும் அனுமதி கொடுக்க வேண்டாம் அனுமதிக்கு பக்கத்தில் உள்ள டெனி என்ற பட்டனை கொடுத்து பாதுகாத்துக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள சைபர் குற்றம் விழிப்புணர்வு காணொளியில் தெரிவித்துள்ளார்.