தூத்துக்குடியில் 20-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – விவசாயிகளுக்கு முக்கிய அழைப்பு!

தூத்துக்குடியில் 20-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – விவசாயிகளுக்கு முக்கிய அழைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20.08.2026 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள “முத்து அரங்கத்தில்” நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள், குறைகள் மற்றும் கோரிக்கைகளை விவசாயிகள் நேரடியாகத் தெரிவிக்கலாம்.

விவசாயிகளின் குறைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, விவசாயம் சம்பந்தப்பட்ட தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.