தூத்துக்குடி ஷிப்பிங் கம்பெனியில் ரூ.6லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள் கடத்தல்!

தூத்துக்குடி ஷிப்பிங் கம்பெனியில் ரூ.6லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள் கடத்தல்!

தூத்துக்குடியில் ஷிப்பிங் கம்பெனியில் ரூ.6லட்சம் மதிப்புள்ள உர முடைகளை கடத்திச் சென்ற 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள மேல அரசரடி பகுதியில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் இருந்து கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு கொண்டு செல்வதற்காக கடந்த 12ஆம் தேதி ரூ.6 லட்சம் மதிப்புலான 32 டன் பொட்டாசியம் உரம் மூடைகள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த லாரி புதிய துறைமுகத்திற்கு செல்லாமல் வேறு எங்கு சென்று விட்டதாம். 

இது குறித்து அந்நிறுவன சூப்பர்வைசரான முத்து விஜயன் (63) என்பவர் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து வழக்குப்  பதிந்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி துறைமுகம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து உர மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்த தவசி மகன் மாதவன் (42) மற்றும் லாரி டிரைவர் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.