கழுகுமலை, ஏரல் பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை: 5,985 லிட்டா் எண்ணெய் பறிமுதல்!

கழுகுமலையில் உள்ள எண்ணெய் ஆலைகளில் உபயோகப்படுத்தப்பட்ட டின்களில் அடைக்கப்பட்ட 5985 லிட்டர் எண்ணெய் வகைகள் பறிமுதல். மேலும் 12 கிலோ கலர் சேர்க்கப்பட்ட சிக்கன் அழிப்பு - உணவகங்களின் இயக்கத்தினை நிறுத்தவும் அறிவிப்பு - மாவட்ட நியமன அலுவலர் நடவடிக்கை.

கழுகுமலை, ஏரல் பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை: 5,985 லிட்டா் எண்ணெய் பறிமுதல்!

கழுகுமலையில் உள்ள எண்ணெய் ஆலைகளில் உபயோகப்படுத்தப்பட்ட டின்களில் அடைக்கப்பட்ட 5985 லிட்டர் எண்ணெய் வகைகள் பறிமுதல். மேலும் 12 கிலோ கலர் சேர்க்கப்பட்ட சிக்கன் அழிப்பு - உணவகங்களின் இயக்கத்தினை நிறுத்தவும் அறிவிப்பு - மாவட்ட நியமன அலுவலர் நடவடிக்கை.

உணவு பாதுகாப்பு ஆணையர் திரு.லால்வேணா, மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ், ஆகியோரது வழிகாட்டுதலில், உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் தலைமையில், கயத்தாறு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்(பொ) ஜோதிபாஸூ அடங்கிய குழுவினர் கழுகுமலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  

அவ்வாய்வின் போது, சங்கரன்கோவில் சாலையில் உள்ள மூன்று எண்ணெய் ஆலைகளில், உபயோகப்படுத்தப்பட்ட டின்களில் அடைக்கப்பட்ட 2,535 லிட்டர் தேங்காய் எண்ணெய், 1,155 லிட்டர் கடலை எண்ணெய், 2,295 லிட்டர் பாமொலின் எண்ணெய், 1,100 உபயோகப்படுத்தப்பட்ட காலி டின்கள் மற்றும் 70 உபயோகப்படுத்தப்பட்ட ப்ளாஸ்டிக் கேன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, தொடர் விசாரணை நடைபெற்றுவருகின்றது. 

இதைத் தொடா்ந்து கழுகுமலையில் உள்ள உணவகத்தில், உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு நடத்தியபோது, தொழில் நடத்துவதற்கான உரிமம் இல்லாதது தெரியவந்தது. உரிமம் பெற்ற பிறகே உணவகத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினா். மேலும், அந்த உணவகத்திலிந்து வண்ணம் சோ்க்கப்பட்ட 12 கிலோ கோழி இறைச்சியைப் பறிமுதல் செய்து அழித்தனா். இப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில், காலாவதியான 10 கிலோ பருப்பு, மாவு உள்ளிட்ட உணவுப் பொருள்கள், குளிா்பானங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். தின்பண்டங்களை அச்சிடப்பட்ட காகிதத்தில் வைத்து விற்பனை செய்த ஒரு கடைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஏரல் பகுதியிலும் ஆய்வு

இதைப்போல், ஏரல் பகுதியிலும் அப்பகுதியின் உணவு பாதுகாப்பு அலுவலர் (பொ) ஆய்வு செய்த பொழுது, நியூஸ் பேப்பரில் திண்பண்டங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, மூன்று கடைகளுக்கு அபராதம் விதித்து உத்திரவிடக் கோரி நியமன அலுவலருக்கு அப்பகுதி பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

எச்சரிக்கை

எந்தவொரு வணிகரும் லேபிள் இல்லாமலும், பொட்டலமிடாமலும் சமையல் எண்ணெய் வகைகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், உபயோகப்படுத்தப்பட்ட டின்களில் எண்ணெயை மீண்டும் பொட்டலமிடக்கூடாது என்றும்,  உணவகங்களில் செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், நியூஸ் பேப்பர் உள்ளிட்ட அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பண்டங்களைப் பரிமாறவோ அல்லது பொட்டலமிடவோ கூடாது என்றும், உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் உணவுத் தொழில் மேற்கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கப்படுகின்றது. மீறினால், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.

புகார் 

நுகர்வோர்கள் உணவு பாதுகாப்பு குறித்த புகார்களை, 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது கால் யுவர் கலெக்டரின்  86808 00900 என்ற புகார் எண்ணிற்கோ தெரிவிக்கலாம். தங்களது விபரம் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

+++++++++++++++++++++++++++++++

தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் செய்திகள் முதல் உலகம் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News, Thoothukudi news,), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் டூட்டி விஷன் நியூஸ் (www.tutyvision.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Whatsapp GroupClick Here...