தூத்துக்குடியில் TNPSC உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான இலவச பயிற்சி முகாம் : நாளை முதல் துவக்கம்!

தூத்துக்குடியில் TNPSC உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான இலவச பயிற்சி முகாம் : நாளை முதல் துவக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேர்முக எழுத்து தேர்வு மூலம் உதவி பொறியாளர் (மின்னியல்) காலி பணியிடங்கள் 418 மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் காலிப் பணியிடங்கள் 656 நிரப்பிட டிஎன்பிஎஸ்சி மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டு விரைவில் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. 

எழுத்து தேர்வில் பங்கெடுக்க உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க தமிழ்நாடு பவர் இன்ஜினியர் ஆர்கனைசேஷன் தொழிற்சங்கம் சார்பில் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, திருவண்ணாமலை, சென்னை  ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்பு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிசி மூலமாக பொறியியல் தமிழ் ஆப்டிடியூட் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இதற்கான இலவச பயிற்சி முகாம் தூத்துக்குடியில் நாளை துவங்க‌ உள்ளது. ஏவிஎம் மருத்துவமனை எதிரில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தினசரி மாலை 2 மணி முதல் 5.30 மணி வரை தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. நாளை துவக்க விழாவில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாநில தலைவர் ஜெய்சங்கர், மின்துறை பொறியாளர் அமைப்பின் மாநில தலைவர் குருவேல், பொதுச் செயலாளர் அருள் செல்வன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடைய  மாநில துணைத் தலைவர் முருகன், பொருளாளர் சாம் டேனியல் ராஜ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் மாநில துணை பொது செயலாளர் அப்பாதுரை தலைமை தாங்குகிறார் நிகழ்ச்சியை மாநில உதவி தலைவர் ஆனந்தம் உதவி செயற்பொறியாளர் அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.