தூத்துக்குடியில் தீ-விபத்தில் இளம்பெண் பரிதாப பலி: சார் ஆட்சியர் விசாரணை.!

தூத்துக்குடியில் திருமணமான 4 ஆண்டுகளில் தீவிபத்தில் இளம்பெண் இறந்தது குறித்து சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடியில் தீ-விபத்தில் இளம்பெண் பரிதாப பலி: சார் ஆட்சியர் விசாரணை.!

தூத்துக்குடியில் திருமணமான 4 ஆண்டுகளில் தீவிபத்தில் இளம்பெண் இறந்தது குறித்து சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.  

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் ராஜதுரை இவரது மனைவி பால சுபா (23). இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பாலசுபா தனது வீட்டில் சாமி கும்பிடும்போது கற்பூரம் ஏற்றினாராம். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. 

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் அவர் உயிரிழந்துள்ளதால் சம்பவம் குறித்து சார் ஆட்சியர் கௌரவ் குமார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.