தென் தமிழகத்திலேயே முதல்முறையாக 10 வயது சிறுமிக்கு மஞ்சள் காமாலை நோய்க்கான சிகிச்சை : தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் சாதனை!
தென் தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 வயது சிறுமிக்கு கணையவீக்கம் மற்றும் பித்தப்பாதையில் அடைப்பு கண்டறியப்பட்டு மஞ்சள் காமாலை நோய்க்கான சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 10வயது நிரம்பிய சிறுமி மஞ்சள்காமாலை நோயோடு மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு MRI-MRCP SCAN எடுக்கப்பட்டது. அதில் கணையவீக்கம் மற்றும் பித்தபாதையில் அடைப்பு போன்ற நோய் கண்டறியப்பட்டது. குழந்தைகளுக்கு பித்தபாதையில் கல் மற்றும் கணைய பிரச்சனை ஏற்படுவது அரிது. அதை சரிசெய்ய இதுவரை சென்னை அரசு மருத்துவமணைக்கே குழந்தைகள் அனுப்பிவைக்கப்பட்டன.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதல்வர் சிவகுமார், மருத்துவக் கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிடமருத்துவர் சைலஸ் செயமணி ஆகியோர் வழிகாட்டுதலின்படி குடல் மற்றும் இரைப்பை மருத்துவபிரிவில் உள்ள மருத்துவர்கள் செல்வசேகரன், சாய்ராமன், விக்னேஷ்வரன் சிறந்த முறையில் பித்தபாதையில் அடைத்திருந்த கல் மற்றும் கசடு அடைப்பை ERCP என்ற எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் நீக்கி பித்தபாதையில் வடிகுழாயை (CBD STENT) வெற்றிகரமாக குழந்தைகள் மருத்துவபிரிவு துறைதலைவர் அருணாசலம் மயக்கவியல் மருத்துவர், பலராமன், விஜயராகவன உதவியுடன் வைத்தனர்.
தற்போது குழந்தை காமாலை குறைந்து ஆரோக்கியமாக உள்ளது. இந்தமுறை சிகிச்சை குழந்தைகளுக்கு செய்வதில் தென்தமிழகத்திலயே அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.