மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொலை மிரட்டல் விடுத்த 4 ரவுடிகள் கைது!
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு பகுதியில் கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு பகுதியில் கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று (14.08.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்காணி ரவுண்டானா அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஆத்தூர், முக்காணி பகுதியை சேர்ந்த பூவன் (எ) அய்யாதுரை மகன் மாரியப்பன் (எ) முண்டன் (36) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி மாரியப்பன் (எ) முண்டனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி மாரியப்பன் (எ) முண்டன் மீது ஏற்கனவே ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. அந்தோணிராஜ் மற்றும் போலீசார் நேற்று (14.08.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் கே.டி.கே நகர், கணியன் காலனி அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் இசக்கிமுத்து (20) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி இசக்கிமுத்துவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி இசக்கிமுத்து மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவில்பட்டி
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையிலான போலீசார் நேற்று (14.08.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பல்க் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துகாளை (26) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கையால் தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றதும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி முத்துகாளையை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி முத்துகாளை மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை வழக்குகள் உட்பட 9 வழக்குகளும், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் ஓரு வழக்கும், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் என 12 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரேம் ஆனந்த் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் திரு. மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், காவலர் திரு. முத்துப்பாண்டி மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர் திரு. திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (14.08.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (எ) டியோ முருகன் (23) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி முருகன் (எ) டியோ முருகனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி முருகன் (எ) டியோ முருகன் மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்குகள் உட்பட 5 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், தென்பாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 12 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.