முன்னாள் படைவீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஜூன் 17-ல் தூத்துக்குடியில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மனுக்களுடன் தவறாமல் பங்கேற்க அழைப்பு

முன்னாள் படைவீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஜூன் 17-ல் தூத்துக்குடியில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மனுக்களுடன் தவறாமல் பங்கேற்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோர்களுக்காக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜூன் 17, 2026 (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில், இரட்டை பிரதிகளில் மனுக்களைத் தயாரித்து, அடையாள அட்டை நகல் மற்றும் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்ணுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிலுவையில் உள்ள கோரிக்கைகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக அதிகாரிகளிடம் வழங்கி தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

???? இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி

???? தேதி: 17.06.2026

⏰ நேரம்: காலை 11.00 மணி