புகார் கொடுக்கச் சென்ற மனைவிக்கு அடி உதை : கணவர் கைது!
தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் போலீசில் புகார் கொடுக்கச் சென்ற மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் போலீசில் புகார் கொடுக்கச் சென்ற மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் அத்திப்பழம் என்கிற விவேக் (28). இவரது மனைவி கிரேஸ் தேவி (24). நேற்று இந்த தம்பதியர் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவர் மீது புகார் அளிக்க கிரேஸ் தேவி தூத்துக்குடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றாரம்.
இந்நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த விவேக், மனைவியை காவல்நிலையம் அருகே வைத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிரேஸ் தேவி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் வழக்குப் பதிந்து விவேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.