மினிபஸ்களை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்: RTO அலுவலகத்தில் பரபரப்பு!!
கோவில்பட்டியில் மினிபஸ்களை கண்டித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோக்களுடன் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டியில் மினிபஸ்களை கண்டித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோக்களுடன் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் மினிபஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு வழித்தடத்தில் இயக்கமால் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும்,மேலும் அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும், குண்டர்களை வைத்து மிரட்டுவதாகவும், விதிமுறைகளை மீறி மினிபஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களுடன் வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விதிமுறைகளை மீறி செயல்படும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களின் உரிமைத்தினை ரத்து செய்ய வலியுறுத்தினர். இதில், கோவில்பட்டி ரயில்வே நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் தங்களது ஆட்டோக்களுடன் கலந்து கொண்டனர். இதையெடுத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இரு தரப்பினையும் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.