தூத்துக்குடியில் கேஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டரை தூக்கிலிட்டு நூதன போராட்டம்!
தூத்துக்குடியில், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டரை தூக்கிலிட்டு மாதர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டரை தூக்கிலிட்டு மாதர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் விலை உயர்வை திரும்பப்பெறக் கோரியும் தூத்துக்குடி மேட்டுப்பட்டியில், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிலிண்டரை தூக்கில் தொங்கவிட்டு போராட்டம் நடைபெற்றது. கிளை கிளை செயலாளர் வி.ஆனந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி. பூமயில், மாநில குழு உறுப்பினர் இனிதா, கிளை நிர்வாகிகள் சண்முகக்கனி, முருகேஸ்வரி செல்வி, பிச்சம்மாள், மாரி, பூமாரி, முருகம்மாள், சந்தனமாரி, செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.