தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அமமுக வட்ட செயலாளர்
தூத்துக்குடியில் அமமுக 30 வது வட்ட செயலாளர் காசிலிங்கம் பாஜகவில் இணைந்தார்.
தூத்துக்குடியில் அமமுக 30 வது வட்ட செயலாளர் காசிலிங்கம் பாஜகவில் இணைந்தார்.
அமமுக 30வது வட்ட கழக செயலாளராக பணியாற்றிய காசிலிங்கம் அக்கட்சியில் இருந்து விலகி தெற்கு மாவட்ட தலைவர் சித்தரங்கன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவருடன் அமமுக சார்ந்தவர்களும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன், மண்டல தலைவர் சிவகணேஷ், மண்டல துணைத் தலைவர் லட்சுமணன், மண்டல விளையாட்டு பிரிவு செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.