அரசு மீன்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: எம்.பி, அமைச்சர் உத்ரவாதம்!

மீன்துறை ஊழியர்களின் கோரிக் கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

அரசு மீன்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: எம்.பி, அமைச்சர் உத்ரவாதம்!

மீன்துறை ஊழியர்களின் கோரிக் கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் உத்தரவாதம் அளித்துள்ளனர்.  

தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்கத்தின்  முதல் மாநில மாநாடு தூத்துக்குடியில் நடை பெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு  மீன்துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் இரா.நடேசராசா தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் செ. சுபைராபானு முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ச.சண்முகப்பிரியா வரவேற்புரை யாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டை வாழ்த்தி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் ஆகியோர்  பேசினர்.  தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் த.மகாராஜன் பொதுச் செயலாளர் அறிக்கையையும், மாநிலப் பொருளாளர் ம.நந்த குமார் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பெ.சேவியர் பிரின்ஸ், ரா.ராஜ்மோகன், இரா.ராஜகுரு, தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மு.கார்த்திகேயன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.எஸ்.கிறிஸ்டோபர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தே.முருகன் ஆகியோர் கொடியேற்றினர். மண்டலப் பொறுப்பாளர்கள் செல்வகுமார், சின்னச்சாமி, வெங்கடேஷ், சுரேஷ், பூபதி ராஜா, பாண்டிய ராஜா, சுதாகர், ஜஸ்டின், சங்கர்,  சக்தி உடையார் ஆகியோர்  தீர்மானங்களை முன்மொழிந்தனர். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் இல.ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மகேந்திர பிரபு, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இளமாறன், தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்க மண்டலச் செயலாளர் கணேசன், பட்டு வளர்ச்சி துறை மாநிலத் தலைவர் வி.வெங்கடேசன் வாழ்த்திப் பேசினர். ஆவின் சேர்மன் சுரேஷ் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சி.எஸ்.கிறிஷ்டோபர் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்க பொதுக்குழு உறுப்பினர் கு.சேரந்தைய ராஜா நன்றி கூறினார்.

மாநாட்டில் பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகி யோர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கலைஞர் வழியில் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். மீன்துறை ஊழியர்களின் கோரிக் கைகளை நிறைவேற்ற நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர்.

மாநாட்டில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் 63 துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்புக் காலமுறை ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் தலை மையில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் பணிபுரியும் பணியா ளர்களுக்கு வருடத்தில் ஒருமுறை ஊழியர்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்,   ஒவ்வொரு வருடமும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் உரிய காலத்தில் பணிமூப்பு பட்டி யல் வெளியிடப்பட்டு தனிநபர் ஒப்புதலுடன் பதவி உயர்வு வழங்க  வேண்டும், மீன்வளத்துறை பணியா ளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் சேத மடைந்துள்ளது. எனவே புதிய அரசு  குடியிருப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக் குறிச்சி, ராணிப்பேட்டை, திருப் பத்தூர் மற்றும் மயிலாடுதுறை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை யினை ஒட்டிய மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங் களில் புதிய மீன்வளத்துறை அலுவ லகங்கள் அமைக்க வேண்டும். மீன்வள துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற சிங்காரவேலர் குடியிருப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் உள்ள கட்டு மானப் பிரிவின் மூலம் மீனவர்களு க்கு இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.