மக்கள் களம்' நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி கருணாநிதி எம்.பி

'மக்கள் களம்' நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி கருணாநிதி எம்.பி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்குளம் வட்டத்தில் அமைந்துள்ள வல்லநாடு ஊராட்சியில் நடைபெற்ற 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி அன்று (27/10/2023) நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, 1 பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா, 1 பயனாளிக்கு ரூ.10,000 திருமண உதவித் தொகை, 1 பயனாளிக்கு ரூ.2,759 கல்வி உதவித்தொகைக்கான காசோலை, 2 பயனாளிகளுக்கு ரூ.2,243 என மொத்தம் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.
நிகழ்வில்,வல்லநாடு ஊராட்சியை சார்ந்த முத்து கணபதி அவர்கள் வகைக்குளம் - வல்லநாடு மின்பாதையில் மின்வயர் மாற்றி தரும்படி கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து இன்று (06/11/2023) வகைக்குளம் - வல்லநாடு பகுதியில் மின்வாரிய ஊழியர்கள்,சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் மற்றும் மின்வயர்கள் பொருத்தப்பட்டது.
மக்கள் களம் நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜி.ராமசுவாமி, கருங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.