தமிழகத்தை கோமாளிக்கூட்டம் ஆட்சி செய்கிறது: பாஜக தலைவர் பரபரப்பு பேச்சு!
தமிழகத்தை கோமாளிக்கூட்டம் ஆட்சி செய்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழகத்தை கோமாளிக்கூட்டம் ஆட்சி செய்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் மேற்கொண்டு வரும் நடை பயண பிரச்சார பயணமானது இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது. தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இருந்து நடை பயணத்தை துவக்கிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக நேரடியாக மேல சண்முகபுரம் சந்திப்பில் தனது நடை பயணத்தை முடித்துக் கொண்டு அங்கு இருந்த பிரச்சார வாகனத்தில் ஏறி நின்று தனது உரையை நிகழ்த்தினார்.
அப்போது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன். அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி ஆகியோரை விமர்சித்து பேசினார். இவர்கள் தனியாக அரசியல் செய்கின்றார்கள். இவர்களை பஞ்சாயத்து செய்ய வேண்டியது போலீஸ் வேலையாக உள்ளது. இந்த அநியாயத்தை எங்கேயாவது பார்த்திருக்கின்றீர்களா இவர்களது தந்தை ஏற்கனவே தூத்துக்குடியில் எம்எல்ஏ. உங்கள் அப்பா எம் எல் ஏ. அதற்கு அப்புறம் நீங்கள் எம்எல்ஏ. உங்கள் தம்பி மேயர். இனி வரும் தேர்தலில் உங்கள் தம்பி எம்பி. அப்படியானால் நாங்கள் எல்லாம் உங்களுக்கு கொத்தடிமைகளா திரும்பத் திரும்ப இந்த நான்கு பேர்கலே பதவியை எடுத்துக் கொள்வீர்கள்.
கனிமொழிக்கு சென்னையில் இடம் இல்லை என்று தூத்துக்குடிக்கு அனுப்பி விட்டனர். இங்கு நடப்பது முடியாட்சியா? குடும்ப ஆட்சியா? சகோதர சகோதரிகள் நீங்கள் இதை அனுமதிக்க கூடாது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தில் சாப்பாடு போட்டார். கலைஞர் முட்டை போட்டார். கீதா ஜீவன அழுகிய முட்டை போட்டார். . தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியது போல் ஐந்து வருடத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும் ஆனால் இதுவரை 2000 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஆற்று மணலில் தான் கை வைக்கின்றனர். முதல் வேலையாக இருக்கின்றனர்.
ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி பகுதிகளில் அனைத்து இடங்களிலும் மண்ணை அள்ளி பாதாள சாக்கடை மாதிரி ஆக்கிவிட்டனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை 13 மாதங்கள் ஆகிய டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முடிவுகளை வெளியிட முடியவில்லை. இதற்கிடையே மா.சுப்பிரமணியன் குடிபோதை மறுவாழ்வு மையங்களில் இருந்து திரும்பி வருபவர்களுக்கு அரசு வேலை என்று சொல்லி உள்ளார் இரண்டு வருடம் படித்து கஷ்டப்பட்டு படித்து குரூப் 4 எழுதிய எங்களுக்கு வேலை இல்லை இவர்களுக்கு வேலையா என்ன அநியாயமாக உள்ளது என்று இளைஞர்கள் கூறுகின்றனர். இதனால் தான் சொல்வார்கள் ஆளத் தெரியாதவர்களிடமும் ஆளுவதற்கு தகுதி இல்லாதவர்கள் இடமும் அரசவையில் அமர வைத்து விட்டால் கோமாளி கூட்டம் போல் ஆட்சி செய்வார்களாம்.
23ஆம் புலிகேசி போல் ஆட்சி செய்வார்களாம் தற்போது தமிழகம் அப்படித்தான் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தொழில் செய்ய நிதி 6000 கோடி ரூபாய் வந்துள்ளதாக கூறினார்கள் சத்தியமாக கூறுகின்றேன். ஆறு ரூபாய்க் கூட வரவில்லை. எல்லாம் பிராடு பண பரிமாற்றத்திற்காகவே இவர்கள் துபாய் சென்றிருந்தார்கள். இதற்கு கேஸ் போட்டு உள்ளார்கள் கோர்ட்டில் நான் பார்த்துக் கொள்கிறேன் இளைஞர்கள் இந்த அரசியலில் குப்பையில் தூக்கி எறிய வேண்டும் என்று முழுவதும் திமுகவை சாடிய பேசினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மகளிர் அணி தலைவி சசிகலா புஷ்பா உட்பட கட்சியின் நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்.