பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
பாலஸ்தீனத்தின் மீது கொடூரமான ராணுவ தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து விவிடி சிக்னல் அருகே சிபி எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலஸ்தீனத்தின் மீது கொடூரமான ராணுவ தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சிபிஎம் மாநகர் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் பூ மயில் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபி எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ச்சுனன், அப்பாதுரை, ரவீந்திரன், சண்முகராஜ், பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் பா.ராஜா, ஆழ்வை ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துமாரி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், மாணவர் சங்க மாவட்ட தலைவர் கிஷோர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.