தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் அதிரடி பணியிட மாற்றம் – 27 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் அதிரடி பணியிட மாற்றம் – 27 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்!

தூத்துக்குடி, ஆகஸ்ட் 22: தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் நிர்வாக வசதிக்காக 27 சார்பு ஆய்வாளர்கள் (Sub-Inspectors of Police) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. சிவபிரசாத் வெளியிட்டுள்ளார்.

22.08.2026 தேதியிட்ட இந்த பணியிட மாற்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய காவல் நிலையங்கள் மற்றும் பிரிவுகளில் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட 27 சார்பு ஆய்வாளர்கள்:

  1. N. முத்துசெல்வி – தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்திலிருந்து முத்தையாபுரம் காவல் நிலையம்
  2. M. நீலகண்டன் – தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்திலிருந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்
  3. R. தாரணியா – தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திலிருந்து நாறைக்கிணறு காவல் நிலையம்
  4. A. அரோக்கியா ஜென்சி – தாளமுத்துநகர் காவல் நிலையத்திலிருந்து கட்டுப்பாட்டு அறை
  5. S. ராமகிருஷ்ணன் – முத்தையாபுரம் காவல் நிலையத்திலிருந்து தூத்துக்குடி வடக்கு காவல் நிலையம்
  6. T. மோனிகா – தூத்துக்குடி AWPS-ல் பணியிடப்பட்டிருந்த நிலையில் AWPS ஸ்ரீவைகுண்டம்
  7. P. முத்துமாலை – SIPCOT காவல் நிலையத்திலிருந்து தூத்துக்குடி மத்திய காவல் நிலையம்
  8. R. மாரிசெல்வம் – SIPCOT காவல் நிலையத்திலிருந்து விளாத்திகுளம் காவல் நிலையம்
  9. K. காந்திமதி – TDR தாலுகா காவல் நிலையத்திலிருந்து கட்டுப்பாட்டு அறை
  10. R. சோனியா – TDR தாலுகா காவல் நிலையத்திலிருந்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம்
  11. M. ரேணுகா – குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்திலிருந்து நாசரேத் காவல் நிலையம்
  12. P. முத்து – குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்திலிருந்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம்
  13. S. சிவராஜா – சாத்தான்குளம் காவல் நிலையத்திலிருந்து தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம்
  14. B. முரளி – நாசரேத் காவல் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையம்
  15. V. நாகராஜன் – நாசரேத் காவல் நிலையத்திலிருந்து புளியம்பட்டி காவல் நிலையம்
  16. M. ராமகிருஷ்ணன் – ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திலிருந்து தாளமுத்துநகர் காவல் நிலையம்
  17. V. முத்துகிருஷ்ணன் – ஏரல் காவல் நிலையத்திலிருந்து DCB-I
  18. K. மம்மது – குரும்பூர் காவல் நிலையத்திலிருந்து செய்துங்கநல்லூர் காவல் நிலையம்
  19. D. வெங்கடாசலம் – சேரகுளம் காவல் நிலையத்திலிருந்து குரும்பூர் காவல் நிலையம்
  20. V. ஜஸ்டஸ் – செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திலிருந்து சேரகுளம் காவல் நிலையம்
  21. E. திருமலை – கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திலிருந்து மணியாச்சி காவல் நிலையம்
  22. S. சந்தனமாரி – கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திலிருந்து AWPS கோவில்பட்டி
  23. V. நாராயணன் – விளாத்திகுளம் காவல் நிலையத்திலிருந்து எப்போதும்வென்றான் காவல் நிலையம்
  24. N. நாகராஜன் – விளாத்திகுளம் காவல் நிலையத்திலிருந்து சூரங்குடி காவல் நிலையம்
  25. C.V. ஸ்ரீ அருள் மொழி – சூரங்குடி காவல் நிலையத்திலிருந்து தருவைக்குளம் காவல் நிலையம்
  26. V. முருகதாஸ் – எட்டயபுரம் காவல் நிலையத்திலிருந்து சங்கரலிங்கபுரம் காவல் நிலையம்
  27. N. ராஜா பிரபு – KVP கிழக்கு குற்றப்பிரிவு காவல் நிலைய OD / கட்டுப்பாட்டு அறையிலிருந்து கட்டுப்பாட்டு அறை

உடனடியாக அமலுக்கு வரும் உத்தரவு

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து சார்பு ஆய்வாளர்களின் பணிவிடுப்பு மற்றும் புதிய பணியில் சேர்ந்த தேதி குறித்த விவரங்களை உடனடியாக மாவட்ட காவல் அலுவலகத்திற்கு தெரிவிக்க, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் ஒரே உத்தரவில் 27 சார்பு ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த பணியிட மாற்றம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

TUTYVISION – உண்மைக்கு அப்பால் செய்தி அல்ல; உண்மையைத் தேடும் செய்தி.