தூத்துக்குடி மீனவ அரசியல் ஆளுமைகள் மீது தொடரும் குற்றச்சாட்டுகள் – காவல்துறை விரைந்து விசாரிக்க வேண்டும்; இல்லையெனில் தமிழகம் தழுவிய போராட்டம்: பாண்டியாபதி பரதவர் சங்கம் எச்சரிக்கை

தூத்துக்குடி மீனவ அரசியல் ஆளுமைகள் மீது தொடரும் குற்றச்சாட்டுகள் – காவல்துறை விரைந்து விசாரிக்க வேண்டும்; இல்லையெனில் தமிழகம் தழுவிய போராட்டம்: பாண்டியாபதி பரதவர் சங்கம் எச்சரிக்கை

தூத்துக்குடி மீனவ அரசியல் ஆளுமைகள் மீது தொடரும் பொய் குற்றச்சாட்டுகள்.. காவல்துறை விரைந்து விசாரிக்க வேண்டும்; இல்லையெனில் தமிழகம் தழுவிய போராட்டம் – பாண்டியாபதி பரதவர் சங்கம் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவ சமூகத்தைச் சேர்ந்த அரசியல் ஆளுமைகள் மீது தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், இதன் பின்னணியில் திட்டமிட்ட சதிவலை இருப்பதாக சந்தேகம் எழுவதாகவும் கூறி, தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாண்டியாபதி பரதவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகி கூறியதாவது:

கடந்த 26-ஆம் தேதி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது செல்போன் தொலைந்து விட்டதாக புகார் அளித்தார் , அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு பேரை கைது செய்துள்ளது.

இதன் பின்னர், அந்த பெண் மீனவ சமூகத்தைச் சேர்ந்த அரசியல் ஆளுமைகள் மீது தனிப்பட்ட முறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது, நீரோடி முதல் பழவேற்காடு வரை வசிக்கும் பாரம்பரிய பரதவர் மீனவ சமூக மக்களிடையே மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் , தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் மாவட்ட செயலாளரும் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் , இவர்களுக்கு எதிராக தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது

மேலும், சம்பந்தப்பட்ட பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து ஒரு குற்றச்சாட்டை வைத்தார், பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த குற்றம் நடைபெறவில்லை எனக் கூறி மன்னிப்புக் கடிதம் அளித்து, அதன்பின்னர் சில மணி நேரங்களிலேயே மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து காவல்துறை மதுரை ஐ ஜியிடம் புகார் அளித்துள்ளார்..

இதுபோன்ற தொடர்ச்சியான மாறுபட்ட குற்றச்சாட்டுகளின் பின்னணியில் ஏதேனும் சதிவலை உள்ளதா என்பது குறித்து காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டும் .

சமீப காலங்களில் மீனவ சமூகத்தைச் சேர்ந்த அரசியல் ஆளுமைகளை குறிவைத்து சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக நாங்கள் உணர்கிறோம், தனிநபர்களை குறிவைத்து அரசியல் ரீதியாக முடக்க முயற்சி நடைபெறுகிறதா என்பதை காவல்துறை விசாரிக்க வேண்டும் .

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் தங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை , ஆனால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் உயர் பொறுப்புகளில் உள்ள நபர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

“குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. தவறு செய்திருந்தால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால் சம்பந்தமில்லாத நபர்கள் மீது தொடர்ந்து தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்” .

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் , மாவட்ட நிர்வாகமும் உரிய தலையீடு செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள பாரம்பரிய மீனவர் சங்கங்களை ஒருங்கிணைத்து சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் .

பத்திரிகைகள், சமூக வலைதளங்கள், யூடியூப் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தொடர்ந்து வெளியாகும் குற்றச்சாட்டுகள் ஒரு தனிநபர் மீதான தாக்குதலாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மீனவ சமூகத்தின் மீதான தாக்குதலாகவே நாங்கள் கருதுகிறோம். என கூறினார்