தூத்துக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!!

தூத்துக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!!

தூத்துக்குடியில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி கனகசபாபதி தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் சீனிவாசன் (55). இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வந்தார். இவர் தனியாக வசித்து வருவதால் வீட்டுக்கு வந்தால் கதவை உள்ளே பூட்டிக்கொண்டு இருப்பாராம். கடந்த 24 ஆம் தேதி வீட்டுக்குள் சென்றவர் பின்னர் வெளியே வரவில்லை. 

இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தால் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் சீனிவாசன் அழுகிய நிலையில் பிணமாக கடந்தார். 

பின்னர் அவரது உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.