வேலைவாய்ப்பு முகாமில் 517 பேருக்கு பணி நியமன ஆணை : அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்!!

வேலைவாய்ப்பு முகாமில் 517 பேருக்கு பணி நியமன ஆணை : அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்!!

தூத்துக்குடியில் நடந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 517 வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் விழாப்பேருரையாற்றி வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 118 நிறுவனங்கள் மற்றும் 12 திறன் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 2374 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண் வேலைநாடுநர்கள் 1206 மற்றும் பெண் வேலைநாடுநர்கள் 1168 ஆவர். 213 ஆண் வேலைநாடுநர்கள் மற்றம் 137 பெண் வேலைநாடுநர்கள் என மொத்தம் 350 வேலைநாடுநர்கள் இரண்டாம் கட்ட நேர்கானலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், 33 மனுதாரர்கள் திறன் பயிற்சி தொடர்பான விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் பி.கீதா ஜீவன் 310 ஆண்கள் மற்றும் 207 பெண்கள் என மொத்தம் 517 வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் சொர்ண்லதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெ.மல்லிகா, மண்டல இணை இயக்குநர், கல்லூரி கல்வி திருநெல்வேலி மண்டலம் அஇரவீந்திரன், மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) கா.சண்முகசுந்தர், தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குநர் பேச்சியம்மாள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (தொ.வ) சை.சையது முகம்மது மற்றும் அரசு அலுவலர்கள் கல்லூரி மாணவ – மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.