கொலை வழக்கு குற்றவாளிக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை : தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

கொலை வழக்கு குற்றவாளிக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை : தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

பசுவந்தனை காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

கடந்த 20.03.2019 அன்று பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி மனைவி பேச்சியம்மாள் (68/2019) என்பவரை குடும்ப பிரச்சனை காரணமாக கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாளின் உறவினரான கைலாசம் மகன் நல்லகண்ணு (55/2025) என்பவரை பசுந்தனை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. முருகன் அவர்கள் இன்று (23.05.2025) குற்றவாளியான நல்லகண்ணு என்பவருக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார் .

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சண்முகவடிவு, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. எல்லம்மாள் அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் திருமதி. கவிதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.