ஸ்ரீவைகுண்டம் அருகே ஆட்சியர் தலைமையில் ஆதிதிராவிட இன மக்கள் மயானத்திற்கு பயன்படுத்தும் மயானப்பாதை தொடர்பாக சமாதானக்கூட்டம்!
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம் மணக்கரை கிராமம் கீழூர் குக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட இன மக்கள் மயானத்திற்கு பயன்படுத்தும் மயானப்பாதை தொடர்பாக சமாதானக்கூட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், அவர்கள் தலைமையில் இன்று (17.02.2023) நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம் மணக்கரை கிராமம் கீழூர் குக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட இன மக்கள் மயானத்திற்கு பயன்படுத்தும் மயானப்பாதை தொடர்பாக சமாதானக்கூட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், அவர்கள் தலைமையில் இன்று (17.02.2023) நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனைத்து சமூக மக்களாலும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1. மணக்கரை கிராம கீழுர் ஆதிதிராவிடர் இன பொதுமக்கள் மயானத்திற்கு செல்லும் பாதையானது அனைவருக்கும் பொதுவானது. அந்த சாலையில் தான் அனைத்து சமுதாய மக்களின் இறந்த சடலங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். பொதுப்பாதையை பயன்படுத்துவதற்கு எந்தவொரு தடையையும் யார் செய்தாலும் குற்றம் என்பது எடுத்துரைக்கப்பட்டது.
2. தனிநபர் நன்செய் நிலங்களில் இறந்த உடலினை யாரும் எடுத்து செலலு; தல் கூடாது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் நன்செய் நிலங்களில் சாலை அமைப்பதற்கு சாத்தியக்கூறு இல்லை என்று புலத்தணிக்கை மூலம் அறியப்பட்டதை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
3. நடுவக்குறிச்சி சாலைகளை மயானம் வரை பழுது நீக்கம் செய்யவும், மயானத்திற்கு இரு சமுதாய மக்களும் செல்வதற்கு சாலை வசதி ஏறப் டுத்தவும், ஊர் முகப்பில் வரும் சாலையை விரிவாக்கம் செய்வதற்கும், கூடுதல் மின் விளக்குகள் ஏற்படுத்துவதறகு; ம் போர்க்கால நடவடிக்கை எடுத்து செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
Also Read...1 கி.மீ தூரம் தலையில் நார்காலியுடன் NTPL தொழிலாளர்கள் நடைபயணம்..!
4. இரு சமுதாய மயானத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு, மேற்படி மயானங்களை நிலஅளவை செய்து எல்லைக் கற்கள் நட்டிடவும், சுற்றுச்சுவர் எழுப்பிடவும், வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
5. மேற்கண்ட கீழுரில் உள்ள இறந்த நபர்களின் சடலங்களை கொண்டு செல்லும் போது வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கண்காணித்து எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொளள் வேண்டும்.
6. மணக்கரை கிராமத்தில் சாலை அகலப்படுத்துதல், விளக்குகள் அமைத்தல்; பேருந்து நிறுத்தம் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் விரைவில் அரசு மூலம் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
7. மேற்கண்ட தீர்மானங்களை மணக்கரை ஆதி திராவிட இன கீழூர் மக்கள், நடுவக்குறிச்சி நாடார் மக்கள், மற்றும் தேவர் இன மக்கள் ஆகியோர் முழு மனதாக ஏற்றுக் கொண்டதாக உறுதியளித்தனர்.
மேற்படி தீர்மானங்களின் அடிப்படையில் மணக்கரை கீழூர் பொதுமக்களின் மயானத்திற்கு செல்லக்கூடிய பாதை தொடர்பான பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. கி. செந்தில் ராஜ், அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த சமாதானக் கூட்டத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.கௌரவ் குமார் அவர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுலவர், ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர், வருவாய்த்துறை அலுவலர்கள், மணக்கரை கிராம ஊராட்சி தலைவர், கீழூர் ஆதிதிராவிடர் இன மக்கள்; நடுவக்குறிச்சி, மணக்கரை கிராமங்களை சேர்ந்த நாடார், தேவர் மற்றம் ஆதிதிராவிடர் இன பொது மக்கள் கலந்து கொண்டனர்.