மீன் ஆலைகளின் கழிவுகளால் செந்நிறமாக மாறிய தூத்துக்குடி உப்பாற்று ஓடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..
தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் இரசாயன கழிவுகள் கலக்கப்பட்டது தொடர்பாக எம்பி, அமைச்சர் நேரில் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டமானது தமிழ்நாட்டில் அதிகளவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொழிற்சாலைகள் கொண்ட மாவட்டமாகபும், 25-க்கும் மேற்பட்ட ரசாயன ஆலைகளால் தூத்துக்குடி மாவட்டத்தில் நீர், நிலம், காற்று ஆகியவை தொடர்ந்து மாசு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாகக் கூறி மக்கள் எழுச்சி போராட்டத்தின் காரணமாக ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடப்பட்டது. இதுதொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
எங்கள் வாட்ஸ் ஆப் குழுவில் இனைய.. CliCK HERE..
இந்நிலையில், தற்போது, மீன் ஆலைகளின் கழிவுகள் கலக்கப்படுவதால் தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் மாசு ஏற்பட்டுள்ளதாகவும், தெள்ளத்தெளிவாக காட்சியளிக்க வேண்டிய தண்ணீர் ரத்த ஆறுபோல செந்நிறுமாக காணப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சியான மாப்பிள்ளையூர்ணி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ஏராளமான மீன் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளன. குறிப்பாக, கோமஸ்புரம் பகுதியில் மட்டும் 6 மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் உப்பாற்று ஓடை கரையோரம் அமைந்துள்ளன. அந்த மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் மீன்களை கழுவ மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்படும் கெமிக்கல்களை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே உப்பாற்று ஓடையில் விட்டு விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் காரணமாக உப்பாற்று ஓடையில் உள்ள தண்ணீர் முழுவதும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செந்நிறமாக மாறி ரத்த ஆறு ஓடுவது போல் காட்சியளிக்கிறது.
மேலும், மீன் ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகளால் கோமஸ்புரம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அருகே உள்ள உப்பளங்களில் ரசாயனம் கலந்த தண்ணீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓடையில் செந்நிறமாகிய மாறிய கழிவுநீர் கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்க பூமியாக கதறப்படும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்ட போதிலும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என எந்த தரப்பில் இருந்தும் இதுவரை ஒரு ஆய்வு கூட நடத்தப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூலம் உடனடியாக ஆய்வு செய்து கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று ஆய்வு செய்தனர். மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியை வீடியோ மற்றும் ஆடியோவாக அறிந்து கொள்ள ...