உலக தாய்மொழி தினத்தையொட்டி அரசுப்பள்ளியில் பாரத எழுத்தறிவு இயக்க பயிற்சி முகாம்!
எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசுப்பள்ளியில் தேசிய தாய்மொழி தினத்தை முன்னிட்டு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசுப்பள்ளியில் தேசிய தாய்மொழி தினத்தை முன்னிட்டு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி இயங்கிவருகிறது. உலக தாய் மொழி தினத்தையொட்டி புதிய பாரத எழுத்தறிவு இயக்கம் சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை வகித்து வரவேற்றார். பின்னர் சுகாதாரமும் நலவாழ்வும் என்பது குறித்தும் நோய் தடுப்பு பற்றியும் பேரிலோவன்பட்டி ஆரம்ப சுகாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். ஆசிரியர் பயிற்றுனர் சரவணன் தாய்மொழி மற்றும் எழுத்தறிவின் அவசியம் குறித்து கூறினார்.
அடுத்து உரையாற்றிய தலைமை ஆசிரியர் இப்ராஹிம் சுகாதார நல்வாழ்வு நோய் தடுப்புமுறை குறித்து மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் தாய்மொழியில் பேசியதற்கு நன்றி. எழுத்தறிவின் அவசியத்தை கூறிய ஆசிரிய பயிற்றின் சரவணன் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும் பேசுகையில் நாம் நம் தாய்மொழியை போற்றி பாதுகாக்க வேண்டும். பள்ளி செல்லாமல் கல்வியறிவு இல்லாத பெரியவர்களுக்கு தாய்மொழியில் எழுத படிக்க கற்றுத்தர வேண்டும் என்றும் மாணவர்களை வலியுறுத்தினார். நிகழ்வில் உதவி ஆசிரியை இந்திரா தன்னார்வலர்கள் அய்யப்பன் நாகரத்தினம் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்