தூத்துக்குடியில் மீன்களில் விலை கடும் உயர்வு: ரூ.2500 வரை விற்பனை: மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்!

தூத்துக்குடியில் மீன்களில் விலை கடும் உயர்வு: ரூ.2500 வரை விற்பனை: மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்!

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளபோதும், மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. 

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் வருகிற ஜூன் 14ம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைக்காலம் துவங்கி உள்ளது இதன் காரணமாக தமிழக முழுவதும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பாரம்பரிய நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர் சென்று வருகின்றனர். 

இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள், நாளை ஈஸ்டர் பண்டிகை என்பதால் இன்று கரை திரும்பின. இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதாலும் தொடர் விடுமுறை என்பதாலும் மீன்களை வாங்க பொது மக்களின் கூட்டம் அலைமோதியது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.

சீலா மீன் கிலோ 1300 ரூபாய் வரையும் விளைமீன், ஊழிமீன், பாறை ஆகிய மீன்கள் கிலோ 500 முதல் 600 ரூபாய் வரையும் நகரை கிலோ 300 ரூபாய் வரையும் நன்டு கிலோ 600 ரூபாய் வரையும் கேரை, சூரை, குறுவளை ஆகிய மீன்கள் கிலோ 300 முதல் 400 ரூபாய் வரவே விற்பனையானது சாலை மீன் ஒரு கூடை 2500 ரூபாய் வரை விற்பனையானது 

இதேபோன்று ஏற்றுமதி ரக மீன்களான பன்டாரி, தம்பா, கிளை வாளை ஆகியவை கிலோ 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனையானது. விலை உயர்ந்து காணப்பட்டாலும் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.