தூத்துக்குடியில் இளம்பெண் மயக்க மருந்து கொடுத்து பாலையில் வன்கொடுமை புகார்: காவல்துறை விளக்கம்..!

தூத்துக்குடியில் இளம்பெண் மயக்க மருந்து கொடுத்து பாலையில் வன்கொடுமை புகார்: காவல்துறை விளக்கம்..!

தூத்துக்குடியில் இளம்பெண் ஒருவர் தனக்கு ஜீஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் தன்னை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறிய குற்றச்சாட்டில் காவல்துறையினரின் நடவடிக்கையும், அதுகுறித்து விளக்கமும்.

தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 05.04.2025 அன்று தனது தந்தையைத் தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த 3 நபர்கள் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் Cr.No. 270/25, u/s. 296(b), 115(2), 351(2) BNSன் படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மேற்படி முதலாவது குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் பணத்தை பெற்றுக் கொண்டு மிரட்டுவதாகவும் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் Cr.No. 24/2025 u/s. 64, 76, 296(b), 308, 351(2) மற்றும் 66(E) of IT Act வழக்கு பதிவு செய்து, பாலியல் வன்கொடுமை குறித்தான ஆதாரங்கள் மற்றும் பணப்பரிமாற்றம் செய்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையிலும், எதிரியின் கைப்பேசியை கைப்பற்றியும் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த 14.05.2025 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மேற்படி முதலாவது குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது Cr.No. 418/2025 u/s. 296(b) BNS &25(1)(A) Arms Actன் கீழும் வழக்குப்பதிவு செய்து அன்றைய தினமே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இன்றுவரை சிறையில் இருந்து வருகிறார்.

அதே போன்று மேற்படி முதலாவது குற்றம் சாட்டப்பட்ட நபரின் சகோதரி கடந்த 15.05.2025 அன்று அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் Cr.No. 159/25 u/s 126, 296(b), 308(3), 351(3), 356(ii) BNSன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்டவாறு இருதரப்பு புகார்கள் தொடர்பாக காவல்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருதரப்பு வழக்குகளும் காவல்துறையின் விசாரணையில் உள்ள நிலையில் அதுதொடர்பான செய்திகளை ஊடகங்கள் தங்கள் தொலைக்காட்சியில் வெளியிடும் முன் அதன் உண்மை தன்மையை சரிபார்த்து கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.