தூத்துக்குடியில் முதியவர் குத்திக் கொலை: போலீஸ் விசாரணை

தூத்துக்குடியில் முதியவரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் முதியவர் குத்திக் கொலை: போலீஸ் விசாரணை

தூத்துக்குடியில் முதியவரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி கிருபை நகர் 5 வது தெருவை சேர்ந்த உச்சிமாகாளி மகன் பாண்டி (வயது 59). இவர் அப்பகுதியில் குப்பை பொறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று மாலை தூத்துக்குடி முனியசாமி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மர்ம கும்பல் வழிமறித்து சராமாரியாக கத்தி, அரிவாளால் தாக்கியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப் இன்ஸ்பெக்டர்கள் சேகர், சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

 கொலை செய்யபட்ட பாண்டி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பின்னர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக கொலை செய்யபட்டாரா? என தென்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தை டவுன் டிஎஸ்பி சத்யராஜ் பார்வையிட்டார்.