“தேர்தல் விளம்பரங்களுக்கு எதிர்ப்பு! ‘தேர்தல் திருவிழா அல்ல – பரீட்சை’ என “நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி கடிதம்”

“தேர்தல் விளம்பரங்களுக்கு எதிர்ப்பு! ‘தேர்தல் திருவிழா அல்ல – பரீட்சை’ என “நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி கடிதம்”

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, “நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்” கட்சி தேர்தல் அதிகாரிகளுக்கு முக்கிய கோரிக்கையுடன் கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், தேர்தல் என்பது திருவிழா, கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல; அது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான “பரீட்சை” என வலியுறுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் கேள்விகளாகவும், வாக்காளர்கள் அளிக்கும் வாக்குகள் பதில்களாகவும் கருதப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர்கள் வாக்களிக்கும் முன் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய முழு விவரங்கள் — பெயர், வரிசை எண், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் — தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்றும், இது தேர்தல் ஆணையத்தின் முக்கிய பொறுப்பு என்றும் .

இதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் (பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சந்தைகள், சாலை சந்திப்புகள் போன்றவை) பெரிய அளவிலான (8x6) டிஜிட்டல் அல்லது ஃப்ளெக்ஸ் பலகைகளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த முயற்சி மூலம் வாக்காளர்கள் சிந்தித்து, சரியான முடிவுடன் வாக்களிப்பார்கள் என்றும், அது ஜனநாயகத்தின் அடிப்படை கடமை என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைக் கடிதத்தை கட்சியின் மாநில தலைவர் டி.பி.எஸ்.பொன்குமரன் மற்றும் பொதுச் செயலாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் ஆகியோர்  தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலருக்கும் அனுப்பியுள்ளனர்.